ஒவ்வொரு மாணவரையும் சென்றடைவதே எமது நோக்கம்

6 வழிகள்
ஒன்டாரியோவில் உயர்நிலைப்பள்ளி உருமாற்றம்
ஒவ்வொரு மாணவரும் ஒரு தனிநபர் ஆவார் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட விருப்பங்கள், லட்சியங்கள் மற்றும் வலிமைகள் உள்ளன. உயர்நிலைப்பள்ளியில் வெற்றி பெற ஒவ்வொருவருக்கும் ஒரே மாதிரியான சந்தர்ப்பம் வழங்கப்படவேண்டும்.
அதனால்தான் நாங்கள் 6 வழிகளை உருவாக்கியுள்ளோம்.
மாணவர் வெற்றி முதல்முயற்சியின் மையமாக இந்த ஆறு புதுமுறையான புதிய திட்டங்கள் உள்ளன. இவை ஒன்டாரியோ உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு இம்மாகாணத்தில் உயர்நிலைப்பள்ளிக் கல்வியின் தரத்தை உயர்த்துகையில், வெற்றிகரமாக பள்ளி வெளியேறத் தேவையான நன்மதிப்புகளைக் குவிப்பதற்கும் பல வழிகளை அளிக்கிறது.
மாணவர்கள் தங்களுக்கு உகந்ததைக் கற்றுக்கொள்ள தங்கள் உயர்நிலைப்பள்ளி அனுபவத்தை உருபடுத்திக்கொள்ளலாம். அதுவே தனிநபர் வெற்றிக்குரிய வித்தியாசங்களை உருவாக்கும்.





